இலங்கையில், விடுதலைப் புலிகளுடனான இறுதி கட்டப் போரின்போது காணாமல் போனோர் குறித்த 3 நாள் விசாரணை சனிக்கிழமை தொடங்கியது.
இதுதொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அதிபர் குழு அந்த நாட்டின் திரிகோணமலை மாகாணத்தில் விசாரணையைத் தொடங்கியது.
காணாமல் போனோர் குறித்து நம்பிக்கைக்குரிய விசாரணை முறையை கடைபிடிக்காமல் விசாரணையைத் தொடங்கக் கூடாது என்று தமிழர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழர் சமுதாய மன்றத்தை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:
போரின்போது காணாமல் போனோரின் உறவினர்கள் இதுபோன்ற பல விசாரணைகளில் பங்கேற்று, அதனால் எந்தப் பலனுமில்லாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்த விசாரணை முறைகளில், காணாமல் போனோரைக் கண்டுபிடிப்பதற்கான அணுகுமுறை துளியும் இல்லை என்றார் அவர்.