சீன நீர்மூழ்கி கப்பல்களை இலங்கையில் இனிமேல் அனுமதிக்க மாட்டோம் என இலங்கை அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா தெரிவித்துள்ளார்.
2 நாள் சுற்றுப்ப்யணமாக சீனா சென்றுள்ள இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த ஆண்டில் சீன நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு எந்த சூழ்நிலையில் வந்தது என்று எனக்கு தெரியாது. எங்கள் ஆட்சியில் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட அனுமதிக்கமாட்டோம் என்றார்.