‘இந்திய – இலங்கை மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை, வரும், 11ம் தேதி மீண்டும் துவங்கும்’ என, அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் ஜோசப் மைக்கேல் பெரேரா தெரிவித்துள்ளார்.
‘இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண, இரு நாட்டு மீனவர்கள் சங்க பிரதிநிதிகளும், மீண்டும் பேச்சு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்’ என, இலங்கை அரசை இந்தியா கேட்டுக் கொண்டது. இந்நிலையில், இலங்கைக்கான இந்திய தூதர் ஒய்.கே.சின்கா, நேற்று, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ஜோசப் மைக்கேல் பெரேராவை, கொழும்பில் சந்தித்துப் பேசினார். அப்போது, ‘மீனவர்கள் சங்க பிரதிநிதிகள், மீண்டும் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்ய வேண்டும்’ என, பெரேராவிடம் கேட்டுக் கொண்டார்.