ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள தான்சானியா நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில் சின்யங்கா பிராந்தியம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பல்லாயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் அடித்து சென்றுவிட்டது. பல கிராமங்கள் மற்ற இடங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.
ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதில் 50–க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தான்சானியா அரசு அறிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை.
சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்ல முடியவில்லை. இதனால் நிலைமை மோசமாக இருப்பதாக நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.