டில்லி மருத்துவ மாணவி பலாத்காரம் குறித்த இந்தியாவின் மகள் ஆவணப்படத்தை பி.பி.சி. ஒளிபரப்பியது.
கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பரில் டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி, 5 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். நாட்டை உலுக்கிய இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இச்சம்பவத்தின் தொடர்புடைய குற்றவாளியான முகேஷ் சிங்என்பவனை , இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லெஸ்லி உட்வின் , திகார் சிறையில் சந்தித்து பேட்டி எடுத்துள்ளார். தவிர இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படமாகவும் தயாரித்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப கூடாது என மத்திய அரசு வலியுறுத்தியது.இதனைமீறி இன்று காலை 3.30 மணியளவில் லண்டன் பி.பி.சி.யில் இந்தியாவின் மகள் ஆவணப்படம் ஒளிபரப்பானது. மார்ச் 8-ம் தேதிஉலக பெண்கள் தினத்தை முன்னிட்டு ஒளிபரப்ப திட்டமிட்டருந்த பி.பி.சி. முன்கூட்டியே ஒளிபரப்பி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
2