செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பசில் அரசியலில் இருந்து விலகல் பசில் அரசியலில் இருந்து விலகல்

பசில் அரசியலில் இருந்து விலகல் பசில் அரசியலில் இருந்து விலகல்

1 minutes read

இலங்கையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சே படு தோல்வியைத் தழுவினார். ஈழத்தமிழர் ஆதரவுடன் மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்று புதிய ஜனாதிபதி ஆனார். அவர் ஈழத்தமிழர்கள் நலனுக்காக புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் ராஜபக்சே தோல்வி காரணமாக பீதிக்குள்ளான அவரது சகோதரர்கள் கோத்தபய, பசில் இருவரும் வெளிநாட்டுக்கு சென்று விட்டனர். இவர்களில் பசில் ராஜபக்சே மிக, மிக விரக்தி அடைந்த நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

நேற்று அவர் சரணகுண வர்த்தனே எம்.பி.யுடன் போனில் பேசினார். அப்போது பசில், ‘‘நான் மீண்டும் அரசியலில் ஈடுபட மாட்டேன். அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டேன்’’ என்றார்.

ராஜபக்சே தலைமையிலான அரசில் பொருளாதார அபிவிருத்தித்துறை மந்திரியாக பசில் இருந்தார். கடந்த 3 ஆண்டுகளில் அவர் பல நூறு கோடி ரூபாயை ஊழல் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை விரைவில் தொடங்க உள்ளது. இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு பயந்தே பசில் அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே மைத்ரிபால சிறிசேனா அரசு இந்தியாவுக்கு சாதகமான முடிவுகளை எடுத்து வருகிறது. சீன நீர்மூழ்கி கப்பல்களை இனி கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த அனுமதிக்க மாட்டோம் என்று சமீபத்தில் இலங்கை அறிவித்தது.

தற்போது சீன உதவியுடன் நடந்து வந்த கொழும்பு துறைமுக நகர் திட்டத்தையும் சிறிசேனா அரசு தடுத்து நிறுத்தி உள்ளது. இலங்கையின் இந்த நடவடிக்கைகள் சீனாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.