அரபிக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 45 இந்திய மீனவர்களை அத்துமீறலாக கைது செய்த பாகிஸ்தான் கடலோர காவல் படையினர் அவர்கள் சென்ற படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கராச்சி துறைமுகத்தை ஒட்டியுள்ள பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்காக இவர்களை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ள கடலோர காவல் படையினர் 45 மீனவர்களையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.