செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலராக பெண்?ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலராக பெண்?

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலராக பெண்?ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலராக பெண்?

1 minutes read

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலராக ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இணையதளப் பிரசாரம் தொடங்கியுள்ளது.

அரசியல், பொருளாதாரத் துறைகளில் முக்கியப் பங்காற்றிய பன்னிரண்டு பெண்களின் பெயர்களைப் பரிந்துரைக்கும் நோக்கத்துடன் www.WomanSG.org எனும் வலைதள முகவரி உருவாக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 7 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டன. அடுத்து வரும் நாள்களில் புதிய நபர்களின் பெயர்களை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவர், ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலராகும் வாய்ப்புள்ளதாகப் பரவலாகக் கருதப்படுகிறது.

தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள கிறிஸ்டீன் லகார்டுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர் பிரான்ûஸச் சேர்ந்தவர்.

ஐ.நா.வின் பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்தவர்களை பொதுச்

செயலர் பதவிக்கு பரிசீலிப்பதில்லை என்ற ஒரு வழக்கம் இருந்து வருகிறது.

இதையடுத்து, கிறிஸ்டீன் லகார்டுக்கு வரும் வாய்ப்பு கை நழுவிப் போகும் எனவும் கூறப்படுகிறது. ஐ.நா. பொதுச் செயலர் பதவி யாருக்கு கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.