செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ரா மீது குற்றச்சாட்டு சிறிசேனா மீது கோபம் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே ரா மீது குற்றச்சாட்டு சிறிசேனா மீது கோபம் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே

ரா மீது குற்றச்சாட்டு சிறிசேனா மீது கோபம் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே ரா மீது குற்றச்சாட்டு சிறிசேனா மீது கோபம் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே

2 minutes read

இலங்கை அதிபர் தேர்தலில் தான் அடைந்ததற்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தான் நம்புவதாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் ராஜபக்ஷே அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் பெற்ற அதிர்ச்சி தோல்விக்கு பிறகு ராஜபக்ஷே அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது : கொழும்புவில் இந்திய தூதரகத்தில் இருக்கும் ரா உளவு அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தான் தேர்தலில் என்னை தோல்வி அடைய செய்வதில் முக்கிய பங்காற்றி உள்ளார். இதனை அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் தேர்தலுக்கு முன்னர் கடைசி நிமிடத்திலேயே அவர்கள் இதனை ஒப்புக் கொண்டதால் என்னால் ஏதும் செய்ய முடியாமல் போனது. அந்த நபர், எதிர்க்கட்சி தலைவரான சிறிசேனாவுடன் சேர்ந்து எனது ஆட்சிக்கு எதிராக பேரணி, பிரச்சாரங்கள் ஆகியவற்றை செய்துள்ளனர்.இவர்கள் எனக்கு எதிராக ஒரு அமைப்பாக செயல்பட்டுள்ளனர்.

இலங்கை அரசியலில் ரா அமைப்பின் கை ஓங்கி இருப்பதை தனது முந்தைய பல பேட்டிகளில் மறுத்து வந்த ராஜபக்ஷே, தற்போது நேரடியாக தானே அதனை ஒப்புக் கொண்டுள்ளார். ரா அமைப்பு தான் உங்கள் தோல்விக்கு காரணம் என்றால், அதன் அரசியல் பின்புலத்தில் மோடி இருந்து செயல்பட்டார் என கருதுகிறீர்களா என ராஜபக்ஷேவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “இல்லவே இல்லை. மோடி இதற்கு ஒரு போதும் காரணம் இல்லை என நான் நம்புகிறேன். ஏனெனில், அவர் பதவியேற்று இன்னும் ஓராண்டு கூட ஆகவில்லை. ஆனால், என்னை தோல்வியுற செய்ய போடப்பட்டது நீண்ட நாளைய திட்டம். சுமார் 2 ஆண்டுகளுக்கு மேல் இந்த திட்டம் போடப்பட்டுள்ளது. சீனர்கள் கேள்வி எழுப்பியதை வைத்து அவர்கள் என்னை தவறாக புரிந்து கொண்டு இந்த திட்டத்தை தீட்டி உள்ளனர்” என்றார்.

 

மோடியின் இலங்கை பயணத்திற்கு முன் ராஜபக்ஷே இந்த பேட்டியை அளித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இலங்கை வரும் மோடியை நீங்கள் சந்திப்பீர்களா என கேட்டதற்கு, இதற்கு முன் நாங்கள் 3 முறை சந்தித்துள்ளோம். அவர் எங்கள் நாட்டிற்கு வந்தால், நிச்சயம் அவரை சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.

 

அரசியலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கவில்லை. அதே சமயம் என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவும் வழக்குகள் போட்டு பழிவாங்க நினைக்கிறார்கள். அவர்கள் அப்படி செய்யாமல் இருந்திருந்தால் நிச்சயம் அவர்கள் அரசிற்கு நான் ஆதரவு அளித்திருப்பேன். ஆனால் இப்போது, அவர்கள் எனக்கு எதிராக விசாரணை நடத்தி எங்களை சிறையில் அடைக்க நினைக்கிறார்கள். எவ்வித ஆதாரமும் இல்லாமல் எங்களின் பாஸ்போர்ட்டையும் கைப்பற்ற நினைக்கிறார்கள். இப்படி இருக்கையில் நான் எப்படி அரசியலில் இருந்து ஓய்வுபெறுவேன்? நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக ஒருபோதும் கூறியதில்லை. தற்போது நான் ஓய்வில் மட்டுமே இருந்து வருகிறேன் என ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவி வரும் பதற்றமான அரசியல் சூழ்நிலையில் பார்லி., தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் மோடி, இலங்கை செல்வது மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.