28 ஆண்டுகள் கழித்து இலங்கை செல்லும் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார். இலங்கையில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் ரணில் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து மோடிக்கு இலங்கை ராணுவத்தினர் பீரங்கி குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக இரு நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.
சிவப்பு கம்பள வரவேற்பை அடுத்து இலங்கை ராணுவ அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்று கொண்டார்.அதிபருடன் சந்திப்பு, தேநீர் விருந்து, வர்த்தக பிரமுர்களுடன் கலந்துரையாடல். அமைதிப்படை நினைவிடத்தில் அஞ்சலி என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர், இலங்கை பார்லி.,யில் இன்று மாலை உரையாற்றுகிறார். இலங்கை பார்லி.,யில் உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் மோடி என்ற பெருமையை பெறுகிறார். தமிழர்கள் வாழும் வடக்கு , கிழக்கு பகுதிகளுக்கு மோடி செல்கிறார். தமிழர்களை நேரில் சந்திக்கிறார்