0
உலகின் மிகப் பெரிய, சக்திவாய்ந்த ராக்கெட்டை, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாக செலுத்தி, சோதனை செய்துள்ளது. இந்த ராக்கெட் மூலம், செவ்வாய் கிரகத்திற்கும், பிரமாண்டத்தின் பிற பகுதிகளுக்கும், மக்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் உடாஹ் பாலைவனத்தில், இந்த ராக்கெட் பரிசோதிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு, அமெரிக்க அரசின் நிதி ஒதுக்கீட்டுக்காக, செவ்வாய் கிரக திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் காத்திருக்கின்றன.