செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிரிட்டன் நாடாளுமன்றச் சதுக்கத்தில் மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலைபிரிட்டன் நாடாளுமன்றச் சதுக்கத்தில் மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை

பிரிட்டன் நாடாளுமன்றச் சதுக்கத்தில் மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலைபிரிட்டன் நாடாளுமன்றச் சதுக்கத்தில் மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை

1 minutes read

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள அந்நாட்டு நாடாளுமன்றச் சதுக்கத்தில் மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை சனிக்கிழமை திறக்கப்பட்டது.

இந்தச் சதுக்கத்தில் இடம்பெறும் முதல் இந்தியர் சிலை இதுவாகும். அரசுப் பதவி வகிக்காத ஒருவருக்கு இங்கு சிலை வைக்கப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.

பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், நிறவெறிக்கு எதிராகப் போராடிய நெல்சன் மண்டேலா ஆகியோரின் சிலைகளுக்கு அருகே காந்தி சிலை வைக்கப்பட்டுள்ளது.

9 அடி உயரமுள்ள இந்தச் சிலையை, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது, காந்திக்குப் பிடித்தமான “ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடல் இசைக்கப்பட்டது.

பின்னர், டேவிட் கேமரூன் கூறுகையில், “உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாட்டுக்கும், மிகப் பெரிய ஜனநாயக நாட்டுக்கும் இடையிலான சிறப்பான உறவைக் கொண்டாடும் வகையிலும், மகாத்மா காந்தியின் கருத்துக்களின் வலிமையை பறைசாற்றும் வகையிலும் இச்சிலை நிறுவப்பட்டுள்ளது’ என்றார்.

“இந்தச் சிலை மூலம், காந்தியின் கருத்துக்கள் குறித்து எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள முடியும். இந்தியா-பிரிட்டன் இடையேயான நட்புறவு வலுப்படும்’ என்று அருண் ஜேட்லி கூறினார்.

நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.