உலகிலேயே மக்கள் தொகைக்கு ஏற்ப அதிக கார்களை கொண்ட பெருநகரம் என்ற பெருமையை தற்போது துபாய் பெற்றுள்ளது.
இவ்வகையிலான சராசரி கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் வாழும் ஆயிரம் பேருக்கு 305 கார்களும், இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள் ஆயிரம் பேருக்கு 213 கார்களும் சொந்தமாக உள்ள நிலையில், துபாயில் வசிக்கும் மக்களில் சராசரியாக ஆயிரம் பேருக்கு சொந்தமாக 540 கார்கள் உள்ளன. மொத்தம் 24 லட்சம் மக்கள் தொகையை கொண்ட துபாயில் 14 லட்சம் கார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த எட்டே ஆண்டுகளில் கார்களின் பயன்பாடு இருமடங்கு அதிகமாகி இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் வரும் 2020-ம் ஆண்டுக்குள் துபாயில் ஓடும் கார்களின் எண்ணிக்கை 22 லட்சமாக உயர்ந்துவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.