செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கொழும்பு துறைமுக நகர வான் பகுதியின் கட்டுப்பாட்டு உரிமையை சீனாவிற்கு வழங்கியுள்ளதுகொழும்பு துறைமுக நகர வான் பகுதியின் கட்டுப்பாட்டு உரிமையை சீனாவிற்கு வழங்கியுள்ளது

கொழும்பு துறைமுக நகர வான் பகுதியின் கட்டுப்பாட்டு உரிமையை சீனாவிற்கு வழங்கியுள்ளதுகொழும்பு துறைமுக நகர வான் பகுதியின் கட்டுப்பாட்டு உரிமையை சீனாவிற்கு வழங்கியுள்ளது

1 minutes read

கொழும்பு அருகே, கடல் பகுதியில், செயற்கை தீவை ஏற்படுத்தி, அங்கு துறைமுக நகரம் அமைக்கும் பணியை, ராஜபக் ஷே அரசு, சீனாவின் சி.சி.சி.சி., நிறுவனத்திற்கு வழங்கியது. அதன்பின், அதிபர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் அமைந்த புதிய அரசு, பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி, கொழும்பு துறைமுக நகர திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், ”கொழும்பு துறைமுக நகரில், சீனாவுக்கு வழங்கிய நிலத்தின் மேற்பரப்பில் உள்ள வான் பகுதியின் கட்டுப்பாட்டு உரிமையும், சி.சி.சி.சி., நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது,” என, இலங்கை விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைமை இயக்குனர் நிமல் திரி குற்றம் சாட்டியுள்ளார். ”வான் பகுதியின் சட்டப்பூர்வ உரிமை குறித்து, சீனா உடன் ராஜபக் ஷே அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தை ஆராய வேண்டும்,” என்றும், அவர், சிறிசேன அரசை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு, கொழும்பு அருகே, சீனாவின் இரண்டு நீர்மூழ்கி கப்பல்கள் வந்ததற்கு, பாதுகாப்பு காரணங்களை காட்டி, இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், வான் பகுதியின் கட்டுப்பாடு, சீனாவிற்கு தாரை வார்க்கப்பட்டிருக்கும் செய்தி, இந்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ‘வான் பகுதி கட்டுப்பாட்டு உரிமை, சி.சி.சி.சி., நிறுவனத்திற்குத் தான் வழங்கப்பட்டுள்ளதே தவிர, சீனாவிற்கு அல்ல’ என, கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்து உள்ளது. ஆனால், சீன அரசின் பங்கு மூலதனத்துடன் செயல்படும் பொதுத் துறை நிறுவனம்தான், சி.சி.சி.சி., என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.