செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வட கொரியா | அமெரிக்காவுடன் அணு ஆயுத போரில் ஈடுபட தயார்வட கொரியா | அமெரிக்காவுடன் அணு ஆயுத போரில் ஈடுபட தயார்

வட கொரியா | அமெரிக்காவுடன் அணு ஆயுத போரில் ஈடுபட தயார்வட கொரியா | அமெரிக்காவுடன் அணு ஆயுத போரில் ஈடுபட தயார்

1 minutes read

அமெரிக்காவுடன் அணு ஆயுத போரில் ஈடுபட வட கொரியா தயாராக உள்ளதாக, அந்நாட்டுக்கான பிரிட்டன் தூதர் ஹியுன் ஹக்-பாங் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவின் எல்லைப்பகுதியில் தென் கொரியா மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகளின் பயிற்சி தொடருமானால் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறினார். மேற்கு லண்டனில் உள்ள அக்டன் தூதரக அலுவலகத்தில் ஸ்கை டி.வி. செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். யார் பட்டனை முதலில் அழுத்தவது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நாங்கள் எப்போதும் அமைதியை விரும்புபவர்கள். ஆகையால் போரை விரும்பவில்லை. ஆனால் போரை கண்டு நாங்கள் அஞ்சவில்லை. இது தான் எங்கள் அரசின் கொள்கை என்று கூறினார்.

அமெரிக்காவும், தென் கொரியாவும் போர் பயிற்சியில் ஈடுபடுவது ஆக்கிரமிப்பு முயற்சி என வட கொரியா தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகள் அனைத்தும் இது பாதுகாப்பு முன்னெச்சரிகை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.