செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தமிழர்களிடம் இருந்து ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் ஒப்படைப்புதமிழர்களிடம் இருந்து ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் ஒப்படைப்பு

தமிழர்களிடம் இருந்து ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் ஒப்படைப்புதமிழர்களிடம் இருந்து ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் ஒப்படைப்பு

1 minutes read

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில், தமிழர்களிடம் இருந்து ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை திருப்பி அளிப்பதில் முதல் நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.
அதன்படி, 425 ஏக்கர் நிலத்தை அதிபர் மைத்ரிபால சிறீசேனா திங்கள்கிழமை மீண்டும் தமிழர்களிடம் ஒப்படைத்தார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிலங்களை உரியவர்களிடம் வழங்கி அவர் பேசியதாவது:
எனது ஆட்சியில் இனம், மத அடிப்படையில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
நாட்டில் சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம் இன மக்கள் இடையே அமைதியையும், நல்லிணக்கத்தையும் உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களின் நிலப்பிரச்னைகள் தீர்க்கப்படும். வடக்கு மாகாணத்தில் வாழும் மக்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் சிறந்த வாழ்க்கைச் சூழலை வழங்கும் வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில், போரில் அழிந்த வழிபாட்டுத் தலங்களை மீண்டும் கட்டமைக்கும் திட்டத்தை அரசு மேற்கொண்டு வருகிறது என்று சிறீசேனா பேசினார்.
இந்நிகழ்ச்சியில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, மூத்த அமைச்சர்கள், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.