இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் ஓராண்டு நீட்டிக்கவும், வான்வழித் தாக்குதல்களை சிரியாவுக்கும் விரிவுபடுத்தவும் கனடா முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்க பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் முடிவு செய்துள்ளார்.
மேலும், இராக் மட்டுமின்றி, சிரியாவிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீதான வான்வழித் தாக்குதலை விரிவுபடுத்த அவர் முடிவு செய்துள்ளார்.
இதற்கான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
0