ஐ.நா.சபை சார்பில், வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள அமைதி காப்பு மாநாட்டில், இந்திய ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் பங்கேற்க உள்ளார்.
ஐ.நா.சபையின் அமைதி காப்பு நடவடிக்கை துறை சார்பில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில், பல்வேறு நாடுகளின் ராணுவத் தளபதிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டை, ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தொடக்கி வைக்க உள்ளார்.
மாநாட்டில் பங்கேற்கவிருந்த, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ரஹீல் ஷெரீஃப் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். அவரது சார்பில், படைத் தளபதி ஒருவர் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.சபை சார்பில் இதுவரை நடத்தப்பட்டுள்ள 44 அமைதி காக்கும் பணிகளுக்கு, இந்தியா சார்பில் 1,80,000க்கும் அதிகமான படை வீரர்கள் அனுப்பப்பட்டனர். அவர்களில், 158 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது பிற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகமானஎண்ணிக்கையாகும்.