செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 13 வயது பள்ளி மாணவர் கைது | ஆசிரியை மீது அம்பு ஏய்து கொலை13 வயது பள்ளி மாணவர் கைது | ஆசிரியை மீது அம்பு ஏய்து கொலை

13 வயது பள்ளி மாணவர் கைது | ஆசிரியை மீது அம்பு ஏய்து கொலை13 வயது பள்ளி மாணவர் கைது | ஆசிரியை மீது அம்பு ஏய்து கொலை

1 minutes read

ஸ்பெயின் நாட்டில் பள்ளியில் ஆசிரியையை அம்பு ஏய்து கொலைசெய்த 13 வயது மாணவரை போலீசார் கைது செய்தனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

பார்சிலோனாவில் உள்ள பள்ளியில் ஆசிரியை கொலை செய்ய எந்தஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்பதை போலீசார் உறுதிபடுத்தவில்லை. இருப்பினும் மற்றொருவரை காப்பாற்ற முயன்றபோது ஆசிரியை கொலை செய்யப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சம்பவத்தில் மேலும் 4 பேர் காயம் அடைந்து உள்ளனர் என்றும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே மாணவர் காலையில் கத்தியுடன் பள்ளிக்கு வந்ததாகவும், அப்போது ஆசிரியை மற்றும் அவரது மகளை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாகவும் ஸ்பெயின் இணையதளங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது.

ஆசிரியை மாணவர் கத்தியால் குத்தியபோது, பக்கத்து வகுப்பில் இருந்த ஆசிரியை அவரை காப்பாற்ற முயன்று உள்ளார். அப்போது மாணவர் அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஆசிரியை உயிரிழந்தார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.  இதுபோன்ற சம்பவங்களால் மிகவும் காயம் அடைந்து உள்ளதாவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் பார்சிலோனா மேயர் டுவிட்டரில் செய்தி வெளியிட்டு உள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.