செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை | எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்ஸி20 ஆண்டுகள் சிறைத் தண்டனை | எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்ஸி

20 ஆண்டுகள் சிறைத் தண்டனை | எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்ஸி20 ஆண்டுகள் சிறைத் தண்டனை | எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்ஸி

1 minutes read

எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்ஸிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தேசிய காவல் துறை பயிற்சிக் கல்லூரியில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் பலத்த காவல் இடையே தனது தீர்ப்பை நீதிபதி அமது யூசுப் வாசித்தார்.

மோர்ஸி அதிபராக இருந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அவர் பதவி விலக வலியுறுத்தி அதிபர் மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது நிகழ்ந்த வன்முறையில் பத்திரிகையாளர் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பான வழக்கில், மோர்ஸியுடன், அவரது முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியைச் சேர்ந்த 12 முக்கியத் தலைவர்கள் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதில் நால்வர் தலைமறைவாக உள்ளனர்.

இதே வழக்கு தொடர்பாக மோர்ஸி மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக் குற்றச்சாட்டை நீதிபதி நிராகரித்தார். சட்ட விரோதமாக பொதுமக்கள் பலரை சிறையில் அடைத்தது, அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளில் அவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

மோர்ஸிக்கு எதிராக வழங்கப்படும் முதல் தீர்ப்பு இது. அவர் மீது உளவு பார்த்தல், கொலை, சிறையிலிருந்து தப்பிக்க முயற்சி உள்ளிட்ட மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.