செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மத்திய தரைக்கடலில் கவிழ்ந்து 900 பேரை பலி வாங்கிய கப்பலின் கேப்டன் கைது மத்திய தரைக்கடலில் கவிழ்ந்து 900 பேரை பலி வாங்கிய கப்பலின் கேப்டன் கைது

மத்திய தரைக்கடலில் கவிழ்ந்து 900 பேரை பலி வாங்கிய கப்பலின் கேப்டன் கைது மத்திய தரைக்கடலில் கவிழ்ந்து 900 பேரை பலி வாங்கிய கப்பலின் கேப்டன் கைது

1 minutes read

போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவிலிருந்து வெளியேறியவர்களை ஏற்றிச் சென்ற போது, மத்திய தரைக்கடலில் கவிழ்ந்து, 900 பேரை பலி வாங்கிய, கப்பலின் கேப்டன் மற்றும் பணியாளர்களை, இத்தாலி நாட்டின் போலீசார் கைது செய்துள்ளனர். லிபியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருவதால், அங்கு வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உயிரை காப்பாற்றிக் கொள்ளவும், பிழைப்பு தேடியும், ஆயிரக்கணக்கானோர், மத்திய தரைக்கடலில், ஓட்டை, உடைசல் கப்பல்கள், படகுகளில் பயணம் செய்து, இத்தாலி, கிரீஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளை அடைந்து வருகின்றனர். கடந்த வார இறுதியில், அளவுக்கு அதிகமாக, 1,000 அகதிகளை ஏற்றிச் சென்ற அந்த கப்பல், நடுக்கடலில் மூழ்கியது. இதில், 900 பேர் இறந்தனர்; 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். இந்த கோர விபத்து குறித்து விசாரித்து வரும் இத்தாலிய போலீசார், கப்பலின் கேப்டன் மற்றும் பணியாளர்களை கைது செய்துள்ளனர். கைதானவர்கள் மீது, சட்டவிரோதமாக அகதிகளை ஏற்றிச் சென்றது; அவர்களை படுகொலை செய்தது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில், இத்தாலிக்கு அருகில், 900 அகதிகள் கடலில் மூழ்கி பலியானது போல, இம்மாதம் 13ம் தேதியும், 400 பேர் மத்திய தரைக்கடலில் மூழ்கினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.