பாகிஸ்தானில் தெரீக் இ தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது, அவ்வப்போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. மிகவும் ஆபத்தான இந்த பயங்கரவாத அமைப்பு தற்போது ஒமர் 1 என்ற ஏவுகணையை தயாரித்துள்ளது. இதன் சோதனை சமீபத்தில் நடந்ததாகவும், அதில் ஒமர்1 ஏவுகணை சிறப்பாக செயல்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒமர் 1 ஏவுகணையின் பாகங்கள், அவற்றை இணைத்து ஏவுகணையை தயாரிப்பது உள்ளிட்ட காட்சிகளை கொண்ட வீடியோவை தெரீக் இ தலிபான் அமைப்பு வௌியிட்டுள்ளது.
2