செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிரிட்டன் அரச குடும்பத்தின் இரண்டாவது வாரிசை வரவேற்க மக்கள் தயார்பிரிட்டன் அரச குடும்பத்தின் இரண்டாவது வாரிசை வரவேற்க மக்கள் தயார்

பிரிட்டன் அரச குடும்பத்தின் இரண்டாவது வாரிசை வரவேற்க மக்கள் தயார்பிரிட்டன் அரச குடும்பத்தின் இரண்டாவது வாரிசை வரவேற்க மக்கள் தயார்

1 minutes read

பிரிட்டன் அரச குடும்பத்தின் இரண்டாவது வாரிசை வரவேற்பதற்கு, அரச குடும்பத்தினருடன், அந்நாட்டு மக்களும் தயாராக உள்ளனர்.

இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் தம்பதியின் முதல் குழந்தையான ஜார்ஜ் பிறந்த, லண்டனின், செயின்ட் மேரி மருத்துவமனையின் லிண்டோ பிரிவிலேயே, இரண்டாவது குழந்தை யும் பிறக்க உள்ளது. கடந்த செவ்வாய் கிழமை முதல், ஆறு வாரங்களுக்கு, இளவரசர் வில்லியம் பேறுகால விடுமுறை எடுத்து, மனைவி கேட் மிடில்டனுடன் தங்கியுள்ளார். வில்லியமின் சகோதரர் ஹாரியும், லண்டனுக்கு வந்துவிட்டார். குட்டி இளவரசர் ஜார்ஜும், தன் உடன்பிறப்பை காண காத்திருக்கிறார்.

கடந்த முறை போன்று, இம்முறையும், கேட் மிடில்டனின் பெற்றோரும் அனைவரும் முன்னதாக மருத்துவமனைக்கு வர திட்டமிட்டுள்ளனர். இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமீலா பார்க்கருடன் மருத்துவமனைக்கு வரவுள்ளார். கேட்டின் சகோதரர் ஜேம்ஸ், லாஸ் ஏஞ்சல்சில் இருந்தும், சகோதரி பீபா, ஜெனீவாவில் இருந்தும் லண்டன் வந்துள்ளனர். கேட் அனுமதிக்கப்பட வுள்ள மருத்துவமனையின் அருகில், பொதுமக்கள் கூடியுள்ளனர். பலூன்கள், கொடிகள், போஸ்டர், பேனர் போன்றவை சாலைகளில் குவிந்துள்ளன. மருத்துவமனையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குழந்தை பிறந்ததை வரவேற்கும் வகையில், புதிய நாணயம் வெளியிட தயாராக உள்ளது. குட்டி இளவரசர் ஜார்ஜ் பிறந்தபோது வெளியிடப்பட்ட, ஐந்து பவுண்டு நாணயம், சில தினங்களிலேயே தீர்ந்துவிட்டது. கடைகளில், இளவரசர், இளவரசி சம்பந்தப்பட்ட பொருட்களின் விற்பனை அமோகமாக உள்ளன. குழந்தை பிறப்பதை முன்னிட்டு, செயின்ட் மேரி மருத்துவமனையில், மீடியாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடத்தில், பாதுகாப்பு கருதி தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இளவரசருக்கு இரண்டாவது குழந்தை பிறப்பதால், மருத்துவமனையில் அதே நேரத்தில் பிறக்கும் குழந்தைக்கு ஏறக்குறைய, 10 கோடி ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தை பிறந்தால், 400 கோடி ரூபாயும், ஆண் குழந்தை பிறந்தால், 300 கோடி ரூபாயும், பிரிட்டன் மக்கள் பந்தயம் கட்டியுள்ளனர். பெண் குழந்தைக்கு ஏலிஸ் என்ற பெயர் வைக்கப்படும் என, 46 கோடி ரூபாயும், ஆண் குழந்தைக்கு ஜேம்ஸ் என்ற பெயர் வைக்கப்படும் என, 25 கோடி ரூபாயும் பந்தயம் கட்டியுள்ளனர். கேட் மிடில்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நிமிடங்களுக்கு பின், கெங்சிஸ்டன் மாளிகையின் இன்ஸ்டாகிராம் மற்றும் ‘டுவிட்டரில்’ முதல் தகவல் வெளியிடப்படும். இரண்டாவதாக, குழந்தை பிறப்பு, பாலினம், நேரம், எடை உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படும். பக்கிங்ஹாம் மாளிகையின் வெளியில், அதிகாரப்பூர்வ தகவல் பலகை வைக்கப்படும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.