ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர்களின் பிடியில் உள்ள அன்பர் மாகாணத்தில் பயங்கரவாதிகள் மீது ஈராக் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் ஒரு சில நாட்களில் 250க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக, ஈராக் ராணுவத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஈராக், ராணுவம், விமானப்படை மற்றும் கூட்டாளி நாடுகள் இணைந்து நடத்திய தாக்குதலால், தங்கள் ராணுவம் முன்னேறி வருவதாகவும் அவர் கூறினார்.