செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 5 நாள்களுக்குப் பிறகு 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிருடன் மீட்பு | நேபாள நிலநடுக்கம்5 நாள்களுக்குப் பிறகு 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிருடன் மீட்பு | நேபாள நிலநடுக்கம்

5 நாள்களுக்குப் பிறகு 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிருடன் மீட்பு | நேபாள நிலநடுக்கம்5 நாள்களுக்குப் பிறகு 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிருடன் மீட்பு | நேபாள நிலநடுக்கம்

1 minutes read

நேபாளத்தில், கடந்த 5 நாள்களாக கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்த 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் வியாழக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டனர்.

நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்கால் அந்த நாட்டின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை சுமார் 10,000 பேர் இறந்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அவ்வப்போது நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதாலும், மோசமான வானிலை காரணமாகவும் அங்கு மீட்புப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள முடியாத நிலை தொடர்கிறது.

இந்த நிலையில், நேபாளத்தின் நுவாகோட் நகரில், நிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமான குடியிருப்புக் கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிறுவன் ஒருவன் சிக்கித் தவிப்பது, வியாழக்கிழமை அங்கு மீட்புப் பணியை மேற்கொண்ட படையினருக்குத் தெரிய வந்தது. உடனே, அமெரிக்க மீட்புப் படையினருடன் நேபாள போலீஸார் அந்தப் பகுதிக்கு விரைந்தனர். 5 மணி நேர நீண்ட போராட்டத்துக்கு பிறகு, லம்பா தெமாங்க் என்ற அந்தச் சிறுவனை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.

பக்தாபூர் நகரில் கட்டட இடிபாடுகளில் சிக்கிய 4 மாத குழந்தை சில தினங்களுக்கு முன்பு உயிருடன் மீட்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது, 15 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது அதிசய நிகழ்வாக கருதப்படுகிறது.

இதேபோன்று, காத்மாண்டு பேருந்து நிலைய இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்த கிருஷ்ண தேவி கட்கா என்ற 30 வயது பெண்ணும் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டார். மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கி, கடந்த 5 நாள்களாக உயிருக்குப் போராடி வந்த நுவாகோட் மாவட்டத்தின் பிதூர் பகுதியைச் சேர்ந்த சிவா சிரஸ்தா என்ற 37 வயது நபர், இந்திய மீட்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.