செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 1 லட்சம் சதுர மீட்டர், 12.6 டன் எடை கொண்ட தேசியக் கொடியை வடிவமைத்த துனிசியா | கின்னஸ் சாதனை1 லட்சம் சதுர மீட்டர், 12.6 டன் எடை கொண்ட தேசியக் கொடியை வடிவமைத்த துனிசியா | கின்னஸ் சாதனை

1 லட்சம் சதுர மீட்டர், 12.6 டன் எடை கொண்ட தேசியக் கொடியை வடிவமைத்த துனிசியா | கின்னஸ் சாதனை1 லட்சம் சதுர மீட்டர், 12.6 டன் எடை கொண்ட தேசியக் கொடியை வடிவமைத்த துனிசியா | கின்னஸ் சாதனை

1 minutes read

உலக சாதனை படைக்கும் நோக்கத்தில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 544 சதுர மீட்டர் பரப்பளவும் 12 ஆயிரத்து 600 கிலோ எடையும் கொண்ட பிரமாண்டமான தேசியக் கொடியை துனிசியா உருவாக்கியுள்ளது.

80 கிலோ மீட்டர் நீளம் கொண்ட துணியால் உருவாக்கப்பட்ட இந்த கொடி, அந்நாட்டின் தேசிய கீதத்தின் பின்னணியுடன் நேற்று துனிசியாவின் தென் பகுதியில் உள்ள பாலைவனத்தில் விரித்து காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கொடியை உருவாக்கியது அங்குள்ள ஒரு துணி ஆலை உரிமையாளரின் மூளை திட்டம் என தெரியவந்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு ஒரு வாலிபன் துனிசியா நாட்டு தேசியக்கொடியை அவமதித்து, அந்த இடத்தில் கருப்புக்கொடியை ஏற்றி வைத்தான். இதைக் கண்டு ஆவேசம் அடைந்த அந்த துணி ஆலை உரிமையாளர், ’நமது மக்களின் தேசபக்தியை வெளிப்படுத்தும் வகையிலும், தேசத் துரோகிகளை எதிர்க்கும் வகையிலும் உலகிலேயே மிகவும் பெரிதான தேசியக் கொடியை உருவாக்க வேண்டும்’ என்று சிந்தித்ததன் விளைவாக இந்த பிரமாண்ட தேசியக் கொடி உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.