செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் புதிய ஆபிஸ் 2016-ன் முன்னோட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது | மைக்ரோசாப்ட் நிறுவனம்புதிய ஆபிஸ் 2016-ன் முன்னோட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது | மைக்ரோசாப்ட் நிறுவனம்

புதிய ஆபிஸ் 2016-ன் முன்னோட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது | மைக்ரோசாப்ட் நிறுவனம்புதிய ஆபிஸ் 2016-ன் முன்னோட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது | மைக்ரோசாப்ட் நிறுவனம்

0 minutes read

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய ஆபிஸ் 2016-ன் முன்னோட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆபிஸ் 2016 பதிப்பை தனி நபர் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு ஐ.டி. துறையினருக்கு மட்டும் பரிசோதனை அடிப்படையில் ஆபிஸ் 2016 மென்பொருள் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்போது வெளியிடப்பட்டிருக்கும் மென்பொருளை விண்டோஸ் 7, 8 மற்றும் 10 ஆகியவை இயங்கும் லேப்டாப், டெப்லேட் மற்றும் கணினிகளில் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஆபிஸ் 2013 மென்பொருளை நீக்கிவிட்டு, இந்த புதிய மென்பொருளை உள்ளீடு செய்யவேண்டும்.

இந்த முன்னோட்ட பதிப்பு பற்றி மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை ஆராய்ந்து அடுத்து வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட மென்பொருளில் அவற்றைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை பிரிவு மேலாளர் ஜாரெட் ஸ்பாட்ரோ தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.