செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 17 வயது இளைஞர் கைது | ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத சதித் திட்டம்17 வயது இளைஞர் கைது | ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத சதித் திட்டம்

17 வயது இளைஞர் கைது | ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத சதித் திட்டம்17 வயது இளைஞர் கைது | ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத சதித் திட்டம்

0 minutes read

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தொடர் குண்டுத் தாக்குதலை நிகழ்த்தத் திட்டமிட்டதாக 17 வயது இளைஞரை அந்த நாட்டுப் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

அந்த இளைஞரின் அறையிலிருந்து 3 குழாய் வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “”ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தத் திட்டமிட்டு, அதற்கான முன்னேற்பாடுகளை செய்ததாக அந்த இளைஞர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்” என்றார்.

ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட் கூறுகையில், “இந்தப் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து அரசுக்கு ஏற்கெனவே தெரியும்” என்றார்.

அந்த இளைஞர் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவித்த போலீஸார், பதின்ம வயதைத் தாண்டாததால் அவரது அடையாளம் வெளியிடப்படாது என்றனர்.

அந்த இளைஞர் அண்மையில் பள்ளிப் படிப்பை நிறுத்தியதாகவும், இணையதளங்களைப் பார்வையிடுவதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்த அவர், மிகக் குறுகிய காலத்தில் மதவெறிக் கொள்கைகளால் கவரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.