செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 6 போலீஸார், 30 கைதிகள் உயிரிழந்தனர் | இராக் சிறைச் சாலையில் கைதிகளிடையே கலவரம்6 போலீஸார், 30 கைதிகள் உயிரிழந்தனர் | இராக் சிறைச் சாலையில் கைதிகளிடையே கலவரம்

6 போலீஸார், 30 கைதிகள் உயிரிழந்தனர் | இராக் சிறைச் சாலையில் கைதிகளிடையே கலவரம்6 போலீஸார், 30 கைதிகள் உயிரிழந்தனர் | இராக் சிறைச் சாலையில் கைதிகளிடையே கலவரம்

1 minutes read

இராக் சிறைச் சாலையில் கைதிகளிடையே சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் 6 போலீஸார், 30 கைதிகள் உயிரிழந்தனர். 40 கைதிகள் தப்பியோடினர்.

தப்பியோடியவர்களில் பயங்கரவாதக் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நாட்டின் தியாலா மாகாணத்திலுள்ள காலிஸ் சிறைச் சாலையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து இரண்டு காவல்துறை அதிகாரிகளும், மருத்துவ அதிகாரிகளும் கூறுகையில் 51 கைதிகளும், 12 போலீஸாரும் உயிரிழந்ததாகக் தெரிவித்தனர்.

எனினும் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சாத் மான் இப்ராஹிம் இதுகுறித்து கூறியதாவது:

சிறைச் சாலைக்குள் இருந்த கைதிகளிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, விசாரணைக்காக அந்தப் பகுதிக்குள் போலீஸார் சென்றனர்.

அப்போது சிறைக்குள் நூற்றுக்கணக்கான கைதிகள் இருந்தனர்.

அவர்கள் விசாரணை நடத்த வந்த போலீஸாரைத் தாக்கி, அவர்களிடமிருந்த ஆயுதங்களைப் பறித்தனர்.

அதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் 30 கைதிகள், 6 போலீஸார் உயிரிழந்தனர் என்றார் இப்ராஹிம்.

இராக்கில் சிறையிலிருந்து கைதிகள் தப்புவது அடிக்கடி நடைபெறும் சம்பவம்தான்.

எனினும், பயங்கரவாதிகள் வெளியிலிருந்து தாக்குதல் நிகழ்த்தி கைதிகளை தப்பச் செய்யும் சம்பவங்களே இதுவரை நடைபெற்றன.

ஆனால் சனிக்கிழமை நடைபெற்ற சம்பவத்தின்போது வெளியிலிருந்து எந்தத் தாக்குதலும் நடைபெறவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.