உலக புகழ்பெற்ற பிரபல ஓவியர் பாப்லோ பிகாசோ இப்போது உயிரோடு இருந்திருந்தால் ரொம்பவே சந்தோச பட்டிருப்பார். ஏனென்றால் அவரது ஓவியம் ஒன்று நியுயார்க்கில் 179.3 மில்லியன் டாலருக்கு ஏலம் போயிருக்கிறது. ” உமன் ஆப் அல்ஜியர்ஸ் ” என்ற பெயரில் அவர் தீட்டிய ஒவியம் நியுயார்க் கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் 1,79,365,000 டாலருக்கு ஏலம் போயிருக்கிறது. 1955 ல் பிகாசோ வரைந்த இந்த ஓவியம் தான் உலகில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியம் என்ற பெருமையை பெறுகிறது.
இந்த ஓவியம் 140 மில்லியன் டாலருக்கு தான் ஏலம் போகும் என்று எதிர்பாக்கப்பட்டது. இதற்கு முன் பிரான்சிஸ் பேக்கன் என்ற ஓவியர் தீட்டிய ” திரீ ஸ்டடீஸ் ஆப் லூசியன் பிராட் ” என்ற ஓவியம் 142 மில்லியன் டாலருக்கு 2013 ம் ஆண்டு ஏலம் விடப்பட்டது.