இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் கடந்த 2009-ஆம் ஆண்டு நிகழ்ந்த இறுதிக்கட்டப் போரின்போது உயிரிழந்த தமிழர்களுக்காக ஒரு வார கால அஞ்சலி நிகழ்ச்சிகளை தமிழர் தேசியக் கூட்டமைப்பு புதன்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து அந்த அமைப்பின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கூறியதாவது:
2009-ஆம் ஆண்டு மே மாதம் போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவு வாரத்தை முள்ளிவாய்க்கால், முல்லைத் தீவு பகுதிகளில் எண்ணெய் விளக்குகளை ஏற்றித் தொடங்கினோம்.
போரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் அஞ்சலி செலுத்துவதாகக் குற்றம் சாட்டப்படுவது தவறு.
1971, 1987-ஆம் ஆண்டுகளில் கொல்லப்பட்ட தங்கள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்த ஜனதா விமுக்தி பெரமுனாவுக்கு (சிங்கள மார்க்சிஸ்ட் இயக்கம்) எவ்வளவு உரிமை உள்ளதோ, அவ்வளவு உரிமை, இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்ட எங்கள் மக்களுக்காக அஞ்சலி செலுத்த எங்களுக்கும் உள்ளது என்றார் அவர்.
0