பிலிப்பின்ஸில் ரப்பர் செருப்புத் தொழிற்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 72 தொழிலாளர்கள் பலியாகினர்.
இதுகுறித்து தேசிய காவல்துறைத் தலைவர் லியோனார்டோ எஸ்பினா கூறியதாவது:
தீவிபத்து நடைபெற்ற இடத்தில் இரண்டு நாள்களாக நடைபெற்ற மீட்புப் பணிகளில் 72 பேரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவர்களில் பலரது உடல்கள் முழுமையாக எரிந்து வெறும் எலும்புக்கூடுகள் மட்டுமே கிடைத்துள்ளன.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்.
இது விபத்தாகவே இருந்தாலும், இத்தனை மரணங்களுக்கும் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர் என்றார் அவர்.
அந்தத் தொழிற்சாலையில் போதிய பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும், விபத்தின்போது அங்கிருந்து உடனடியாக வெளியேற முடியாத அளவு மோசமான இடத்தில் தொழிலாளர்களிடம் வேலை வாங்கப்பட்டதாகவும் தொழிலாளர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
2