செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் புருண்டி அதிபர் தகவல் | “ராணுவ புரட்சி முறியடிப்பு”புருண்டி அதிபர் தகவல் | “ராணுவ புரட்சி முறியடிப்பு”

புருண்டி அதிபர் தகவல் | “ராணுவ புரட்சி முறியடிப்பு”புருண்டி அதிபர் தகவல் | “ராணுவ புரட்சி முறியடிப்பு”

1 minutes read

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புருண்டியில், அதிபர் பியார்ரே நகுருன்ஜிசா பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

அதில் 3–வது தடவையாக அவர் போட்டியிடுகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டம் நடைபெறுகிறது. இதற்கிடையே அதிபர் பியார்ரே நகுருன்ஜிசா தான்சானியா நாட்டில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ளார். இந்த நிலையில் அங்கு திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டது.

இப்புரட்சியை அதிபர் பியார்ரேவுக்கு எதிராக செயல்படும் தளபதி கோட் பிராய்டு நியோம்பர் நடத்தினார். இதனால் அதிபரின் ஆதரவு ராணுவத்துக்கும், தளபதி நியோம்பர் தரப்பு ராணுவ வீரர்களுக்கும் இடையே சண்டை நடந்தது.

தலைநகர் புஜும் புராவில் நடந்த சண்டையில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். அதைத்தொடர்ந்து விமான நிலையம் மற்றும் ரேடியோ நிலையத்தை கைப்பற்றி விட்டதாக தளபதி நியோம்பர் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து புஜும்புரா வீதிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆடிப்பாடி கொண்டாடினர். அதிபர் பியார்ரே நாட்டை விட்டு ஓடிவிட்டதாக அறி வித்தனர்.

ஆனால் ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டு விட்டதாக அதிபர் பியார்ரே நகுருன்னிசா தெரிவித்துள்ளார். அரசு விசுவாச ராணுவ படைகள் புரட்சியை முறியடித்து விட்டதாகவும் அவர் கூறினார். ராணுவம் மற்றும் போலீசாருக்கு டுவிட்டரில் அவர் நன்றி தெரிவித்துள்ளார். அவர்களின் தேசப்பற்றை பாராட்டியுள்ளார்.

பொறுமையுடன் அமைதி காத்த புருண்டி மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். தான்சானியாவில் இருந்து நாடு திரும்ப இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.