செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நேபாள நிலநடுக்கம் | ரூ.63,000 கோடி இழப்புநேபாள நிலநடுக்கம் | ரூ.63,000 கோடி இழப்பு

நேபாள நிலநடுக்கம் | ரூ.63,000 கோடி இழப்புநேபாள நிலநடுக்கம் | ரூ.63,000 கோடி இழப்பு

1 minutes read

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ரூ.63,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். உலகையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த நிலநடுக்கத்தால் நேபாளத்தில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் தரைமட்டமாகின. அந்த பேரிடரின் சுவடுகள் மறைவதற்குள் கடந்த சில நாள்களுக்கு முன்பு அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கமாக நேபாளத்தில் பல முறை நில அதிர்வுகள் நேர்ந்தன.
இந்நிலையில், இந்த பேரிடர் காரணமாக நேபாளத்துக்கு ரூ.63,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் நிதியமைச்சர் ராம் சரண் மகத் தெரிவித்துள்ளார். நன்கொடையாளர்களுடனான கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற அவர் இதுகுறித்து கூறியதாவது:
நேபாளத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க முதல்கட்டமாக ரூ.30,000 கோடி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ரூ.12,000 கோடி செலவில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேபாளம் சீரடைய நன்கொடையாளர்கள் நீண்ட காலம் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.