செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு | “அணுசக்தி ஒப்பந்தத்தை தடுக்க காலம் கடந்துவிடவில்லை”இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு | “அணுசக்தி ஒப்பந்தத்தை தடுக்க காலம் கடந்துவிடவில்லை”

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு | “அணுசக்தி ஒப்பந்தத்தை தடுக்க காலம் கடந்துவிடவில்லை”இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு | “அணுசக்தி ஒப்பந்தத்தை தடுக்க காலம் கடந்துவிடவில்லை”

1 minutes read

ஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் இடையே ஏற்படுவதாக உள்ள அணுசக்தி ஒப்பந்தத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு இன்னும் காலம் கடந்துவிடவில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
கூறினார்.
1967-ஆம் ஆண்டு நடைபெற்ற “ஆறு நாள்’ போரில் கிழக்கு ஜெருசலேமைக் கைப்பற்றியதன் நினைவாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
வல்லரசு நாடுகள் – ஈரான் இடையே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வரைவு ஒப்பந்தத்தில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன.
எனவே அந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், அவற்றைப் பயன்படுத்தி ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் திறன் பெற்றுவிடும்.
எனவே தற்போதைய வரைவு ஒப்பந்தத்தைவிட வலுவான ஒப்பந்தத்தை உருக்க வேண்டியது அவசியம்.
தற்போதைய வரைவு ஒப்பந்தத்தைத் தடுத்து நிறுத்த இன்னும் காலம் கடந்துவிடவில்லை.
அந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதை இஸ்ரேல் மட்டுமின்றி, வேறு சில நாடுகளும் எதிர்த்து வருகின்றன என்றார் நெதன்யாகு.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஷியா பிரிவினர் ஆதிக்கம் நிறைந்த ஈரானுக்கு, அமெரிக்காவுடன் நெருக்கம் ஏற்படுவதை, சன்னிப் பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட அரபு நாடுகள் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.