விமானங்களில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, அவற்றின் கட்டுப்பாட்டு அமைப்புக்குள் கணினி வழியாக ஊடுருவி, அவற்றை இயக்கியதாக இளைஞர் ஒருவர் மீது அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கிறிஸ் ராபர்ட்ஸ் என்ற இளைஞர், தனியார் நிறுவனத்தில் கணினி நிபுணராகப் பணியாற்றி வருகிறார்.
விமானங்களில் அவர் பயணிக்கும்போது, ஒவ்வொரு இருக்கையிலும் பயணிகளின் பொழுதுபோக்குக்காக அமைக்கப்பட்டுள்ள ஒலி, ஒளி இணைப்புக் கருவியில் தனது கணினியைப் பொருத்தி, அந்த விமானங்களின் கட்டுப்பாட்டு அமைப்புக்குள் அவர் ஊடுருவியுள்ளார்.
ஒருமுறை அவ்வாறு ஊடுருவி, விமானத்தின் ஒரு என்ஜினை மட்டும் உயரப் பறக்குமாறு அவர் கட்டளையிட்டதால், அந்த விமானம் ஒரு பக்கமாகச் சாய்ந்து பறந்ததாக இதுகுறித்து விசாரணை நடத்திய அதிகாரிகளிடம் அவர் தெரிவித்துள்ளார்.
9