செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமெரிக்க வான்படை X-37B என்ற மர்மமான விண்வெளி விமானத்தை நேற்று விண்ணில் செலுத்தியது அமெரிக்க வான்படை X-37B என்ற மர்மமான விண்வெளி விமானத்தை நேற்று விண்ணில் செலுத்தியது

அமெரிக்க வான்படை X-37B என்ற மர்மமான விண்வெளி விமானத்தை நேற்று விண்ணில் செலுத்தியது அமெரிக்க வான்படை X-37B என்ற மர்மமான விண்வெளி விமானத்தை நேற்று விண்ணில் செலுத்தியது

1 minutes read

அமெரிக்க வான்படை X-37B என்ற மர்மமான விண்வெளி விமானத்தை நேற்று விண்ணில் செலுத்தியுள்ளது.

X-37B என்ன காரணத்திற்காக விண்ணில் செலுத்தப்படுகிறது என்பது இன்று வரை விடை தெரியாத மர்மமாகவே உள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் இந்த செயற்கைக் கோள், நவீன உளவு மற்றும் அதி நவீன ஆயுத விவகாரங்களுக்காக பயன்படுத்தப்படுவதாக சீனா பல முறை குற்றம் சாட்டியுள்ளது.

ப்ளோரிடா மாநிலத்தின் கேப் கேன்வரேல் வான்படை தளத்திலிருந்து, சரியாக காலை 11.05 மணிக்கு அட்லஸ்-V என்ற  ராக்கெட் மூலம் X-37B விண்ணில் ஏவப்பட்டது. இந்த பெயரிடப்படாத விமானம் எவ்வளவு காலம் விண்வெளி சுற்றுப்பாதையில் இருக்கும் என்ற விவரத்தை அமெரிக்க வான்படை தெரிவிக்கவில்லை. இந்த செயற்கைக் கோள் ’ஹால் த்ரஸ்டர்’ எனும் புதிய தொழில் நுட்பத்திற்கான சோதனை முயற்சி என்று மட்டுமே வான்படை தெரிவித்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு இதே இடத்திலிருந்துதான் முதல் X-37B  விண்ணில் ஏவப்பட்டது. இந்தப் பயணத்திற்கு USA-212 என்றும் பெயரிடப்பட்டது. இதுவே அமெரிக்காவின் ரகசிய விண்வெளி திட்டத்தின் முதல் முயற்சியாகும். அடுத்தடுத்து விண்ணில் செலுத்தப்பட்ட விமானங்கள் அனைத்தும் முந்தைய விமானத்தை விட அதிக காலம் விண்வெளி சுற்றுப்பாதையில் இருந்தவை.  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது பயணத்தை முடித்துக் கொண்ட 3-வது X-37B,  674 நாட்கள் விண்வெளி சுற்றுப்பாதையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.