இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, 2016ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை விஞ்சிவிடும் என ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
உலகப் பொருளாதார சூழ்நிலை குறித்த ஐ.நா.வின் அறிக்கை, புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியப் பொருளாதார வளர்ச்சியானது, நிகழ் ஆண்டு 7.6 சதவீதமாக உயரும். அடுத்த ஆண்டு 7.7 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது, இந்த ஆண்டு 7 சதவீதமாக உயரும். அடுத்த ஆண்டில் 6.8 சதவீதமாக இருக்கும்.
தெற்காசியப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டு 6.7 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 6.9 சதவீதமாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிராந்தியத்தின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா பெரிதும் உதவும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1