செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக சீனா அதிபர் ஜின்பிங் கடும் நடவடிக்கைஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக சீனா அதிபர் ஜின்பிங் கடும் நடவடிக்கை

ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக சீனா அதிபர் ஜின்பிங் கடும் நடவடிக்கைஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக சீனா அதிபர் ஜின்பிங் கடும் நடவடிக்கை

1 minutes read

சீனாவில் அரசு அதிகாரிகளிடையே பெருகியுள்ள லஞ்ச-ஊழல் விவகாரம், அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. எனவே ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக தற்போதைய அதிபர் ஜின்பிங், கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதன் பலனாக பல்வேறு மூத்த அதிகாரிகள், ராணுவ தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் என ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். எனினும் அரசு நிர்வாகத்தில் இருந்து ஊழலை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை.

எனவே இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்த அரசு, இதற்காக புதிய வழி ஒன்றை கையாண்டுள்ளது. அதன்படி அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஒருநாள் சுற்றுலாவாக சிறைச்சாலைகளுக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது. ஊழலில் பிடிபட்டு சிறையில் இருக்கும் அதிகாரிகள், அங்கு படும் துன்பங்களை பார்த்து திருந்துவதற்காகவே இந்த திட்டம் ஆகும்.

அதன்படி அங்குள்ள ஹுபேய் மாகாணத்தை சேர்ந்த கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 70 தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினருடன் அங்குள்ள சிறைச்சாலைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு ஒருநாள் முழுவதும் தங்கியிருந்த அவர்கள், சிறையில் தங்கள் மூத்த அதிகாரிகள் படும் துன்பங்களை பார்த்து விட்டு திரும்பினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.