செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 25 ஆண்டுகளாக டி.வி. பார்க்காமல் இருக்கும் போப் பிரான்சிஸ்25 ஆண்டுகளாக டி.வி. பார்க்காமல் இருக்கும் போப் பிரான்சிஸ்

25 ஆண்டுகளாக டி.வி. பார்க்காமல் இருக்கும் போப் பிரான்சிஸ்25 ஆண்டுகளாக டி.வி. பார்க்காமல் இருக்கும் போப் பிரான்சிஸ்

1 minutes read

உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை குருவாக விளங்கும் போப் பிரான்சிஸ் கடந்த 1990-ம் ஆண்டில் இருந்து டி.வி. நிகழ்ச்சிகளை பார்ப்பதை தவிர்த்து வந்துள்ளார் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அர்ஜென்ட்டினா நாட்டை சேர்ந்த போப் பிரான்சிஸ் தீவிரமான கால்பந்தாட்ட ரசிகராக ஒருகாலத்தில் இருந்தவர் என்று கூறப்படுகின்றது, பியுனோஸ் ஏரிஸ் நகரில் இருக்கும் இவருக்கு பிடித்தமான கால்பந்தாட்ட குழுவினர் ஆடும் போட்டிகளை கூட இவர் டி.வி.யில் பார்ப்பது கிடையாது. மாறாக, தனது மெய்க்காப்பாளர் ஒருவர் மூலமாக ஆட்டத்தின் வெற்றி- தோல்வி நிலவரங்களை இவர் அவ்வப்போது அறிந்து கொள்வதுண்டு.

1994-ம் ஆண்டில் இருந்து ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் உழைத்துவரும் போப் பிரான்சிஸ், டி.வி.யை ஒதுக்கித் தள்ளியதற்கு எந்தவொரு தனிப்பட்ட காரணமும் இல்லை. இது எனக்கானது அல்ல என்று 15-7-1990 அன்று முடிவு செய்தேன். இனி, டி.வி. பார்ப்பதில்லை என்று மேரி மாதா மீது சத்தியம் செய்து விட்டேன். அந்த சத்தியத்தை இன்றளவும் காப்பாற்றி வருகிறேன் என்கிறார், போப்.

நான் தலைமை போப்பாக ஆவேன் என கனவில் கூட நினைத்ததில்லை. அதற்கேற்றாற்போல், பணிச்சுமை என்னை மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றது. பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஜுன் மாதத்துக்குள் எல்லா வேலைகளையும் முடித்துவிட வேண்டும் என்ற பரபரப்பும் நிர்பந்தமும் இருப்பதுபோல் எனக்கும் நிர்பந்தங்கள் உள்ளன, ஏராளமான பணிகள் உள்ளன. ஆயிரக்கணக்கான பிரச்சனைகளை கையாள வேண்டியுள்ளது என்று கூறும் இவர், தனது வாழ்வில் ஒரேயொரு சுவையான அனுபவத்தை இழந்து விட்டதாக கூறுகிறார்.

பீட்ஸா பிரியரான போப் பிரான்சிஸ், முன்பைப் போல் கடைகளுக்கு சென்று பீட்ஸா சாப்பிட முடிவதில்லை என்று குறிப்பிடும் அதே வேளையில், பார்சல் மூலம் வரவழைத்து சாப்பிடும் பீட்ஸாவுக்கும், கடைகளுக்கு சென்று அங்கேயே அமர்ந்து சாப்பிடும் பீட்ஸாவுக்கும் மனநிறைவில் நிறைய வேறுபாடு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.