செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிரான்ஸ் பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | 2 போர் விமானங்களின் பாதுகாப்புடன் பாதுகாப்பாக தரையிரங்கியதுபிரான்ஸ் பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | 2 போர் விமானங்களின் பாதுகாப்புடன் பாதுகாப்பாக தரையிரங்கியது

பிரான்ஸ் பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | 2 போர் விமானங்களின் பாதுகாப்புடன் பாதுகாப்பாக தரையிரங்கியதுபிரான்ஸ் பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | 2 போர் விமானங்களின் பாதுகாப்புடன் பாதுகாப்பாக தரையிரங்கியது

1 minutes read

அமெரிக்கா வந்த பிரான்ஸ் பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து 2 போர் விமானங்களின் பாதுகாப்புடன் பயணித்து பாதுகாப்பாக தரையிரங்கியது.

ஏ.எப்.022 என்ற பிரான்ஸ் பயணிகள் விமானம் பாரிஸில் இருந்து நியூயார்க் கென்னடி விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆனால் அமெரிக்காவின் மேரிலாந்து போலீசுக்கு வந்த தொலை பேசி அழைப்பில் ஏ.எப்.022 விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விமானத்தின் விமானியை தொடர்புகொள்ள முயற்சித்தனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் கனடாவை சேர்ந்த இரண்டு போர் விமானங்களை ஏ.எப்.022 விமானத்தை பின்தொடரும் படி செய்தனர்.

ஆனால் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் பயணிகள் விமானம் கென்னடி விமான நிலையத்தில் தரையிறங்கியதை அடுத்து இரண்டு போர் விமானங்களும் திரும்பி சென்றன. கடும் சோதனைகளுக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் பொய் என்பது தெரியவந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.