செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உலகிலேயே மிகவும் வயதான இரட்டை பெண்மணிகள் அடுத்தடுத்து மரணம்உலகிலேயே மிகவும் வயதான இரட்டை பெண்மணிகள் அடுத்தடுத்து மரணம்

உலகிலேயே மிகவும் வயதான இரட்டை பெண்மணிகள் அடுத்தடுத்து மரணம்உலகிலேயே மிகவும் வயதான இரட்டை பெண்மணிகள் அடுத்தடுத்து மரணம்

1 minutes read

உலகிலேயே மிகவும் வயதான இரட்டை பெண்மணிகளாக கருதப்பட்ட 103 வயதான புரோரன்ஸ் டேவிஸ் மற்றும் கிளெனிஸ் தாமஸ் ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் மரணம் அடைந்தனர்.

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்குவதற்கு முந்தைய ஆண்டு அதாவது 1911-ம் ஆண்டு பிறந்த இந்த இரட்டையர்கள் இரண்டு உலகப்போரையும் கண்டவர்கள் ஆவார்கள். இவர்கள் சவுத் வேல்ஸ் கேயர்பில்லியில் உள்ள ஒரு சிறிய குகைக்கிராமமான அபெர்ட்ரிட்டில் வசித்து வந்துள்ளனர். அவர்கள் அந்த கிராமத்தை விட்டு வேறெங்கும் சென்றதில்லையாம். அடுத்தடுத்த அறைகளில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களை எளிதில் பார்த்துக்கொள்வதற்காக அவர்களுடைய வீட்டில் சமையல் அறையை இணைத்தே கட்டியுள்ளனர்.

இவர்களுக்கு ஐந்து குழந்தைகள், 12 பேரக்குழந்தைகள் மற்றும் 19 கொள்ளுப்பேரன்கள் உள்ளனர்.

கிளெனிஸ் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி இறந்தார். புரோரன்ஸ் டேவிஸ் மே 20-ந்தேதி இறந்தார்.

இவர்களை பற்றி கிளெனிஸின் 65 மகள் க்வென்டா ஸ்டேகெய் கூறுகையில் ‘‘அவர்கள் இருவரும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அவர்கள் வெளிநாடு சென்றதே கிடையாது. வாழ்நாள் முழுவதும் இணைந்து சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்தனர்’’ என்றார்.

கிளெனிஸ்-க்கு ஒரு குழந்தையும், 9 பேரக்குழந்தையும், 12 கொள்ளுப்பேரன்- பேத்திகளும், ஒரு எள்ளுப்பேரனும் உள்ளனர்.

பிளோரன்சுக்கு மூன்று குழந்தைகளும், 9 பேரக்குழந்தைகளும், 12 கொள்ளுக்பேரன், பேத்திகளும் உள்ளனர்.

இருவரும் திருமணத்திற்கு முன்னர் துப்புரவுத் தொழில் செய்து வந்துள்ளனர். கணவர்கள் இறக்கும் வரை அவர்களுடன் இணைந்தே இருந்துள்ளனர். கணவர்கள் இறந்த பின்னர் இவர்கள் இருவரும் மறுமணம் முடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.