செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வரலாற்றில் முதல் முறையாக பெண் துணைவேந்தர் ? ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வரலாற்றில் முதல் முறையாக பெண் துணைவேந்தர் ?

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வரலாற்றில் முதல் முறையாக பெண் துணைவேந்தர் ? ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வரலாற்றில் முதல் முறையாக பெண் துணைவேந்தர் ?

1 minutes read

பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், தனது வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவரை துணைவேந்தராக நியமிக்கப் பரிந்துரைத்துள்ளது.
தீவிரவாதம் குறித்து பல்வேறு ஆய்வுகள் செய்து அந்தத் துறையில் நிபுணராக உள்ள லூஸி ரிச்சர்ட்சன் (56). அவர் ஏற்கெனவே ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். அவர் தற்போது ஸ்காட்லாந்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றிவருகிறார். இந்நிலையில் லூஸியை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக பரிந்துரைத்துள்ளனர்.
இதுகுறித்து இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ள கிரில் பேட்டன் கூறியதாவது:
லூஸி ரிச்சர்ட்சன் கல்விக்காக தன்னை அர்ப்பணம் செய்து கொண்டவர். அவர் ஆற்றியுள்ள பணிகள் குறித்து துணைவேந்தரைப் பரிந்துரைக்கும் குழுவினருக்கு பெரிய மரியாதை உள்ளது.
அடுத்ததாக, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தின் 5,000 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் லூஸியின் நியமனம் குறித்து பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
அந்த அவை நியமனப் பரிந்துரையை அங்கீகரித்த பின் லூஸி அடுத்த ஆண்டு ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பணியில் இணைவார்.
துணைவேந்தர் பதவியின் பதவிக்காலம் 7 ஆண்டுகளாகும் என்று கிரில் பேட்டன் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.