சாதனைகள் புரிவதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை, இங்கிலாந்தை சேர்ந்த, 90 வயது பாட்டி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.இங்கிலாந்தின் வரலாற்று சிறப்பு மிக்க டிவோன் மாகாணத்தின் எக்சிடெர் நகரத்தை சேர்ந்தவர் ஸ்டெல்லா கிலார்டு; இவருக்கு வயது, 90.இவரது செல்ல மகள் கேதி, கணைய புற்றுநோயால், கடந்த 2012ம் ஆண்டு இறந்து போனார். அன்று முதல், புற்றுநோய் பாதித்தவர்களுக்கு உதவுவதை தன் வாழ்நாளின் லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.உலக புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு, 1,580 பவுண்டு நிதி திரட்ட உயிரை பணயம் வைத்து, 15 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து, பாராசூட் உதவியுடன் குதித்து சாதனை படைத்துள்ளார் கிலார்டு.இதுகுறித்து அவர் கூறும்போது, ”பயிற்சியாளரை முழுமையாக நம்பி இந்த செயலில் இறங்கினேன். கொஞ்சம் கூட பயமில்லை. வானிலிருந்து கீழே பறந்து வரும் போது பறவையை போல் உணர்ந்தேன்,” என்றார்.
1