பிரபல வீடியோ வலைதளமான யூ-டியூப் தனது 10-ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் வெளியான விளம்பரங்களில் சிறந்த விளம்பரம் எது? என்று வாக்களிக்குமாறு தனது பயனர்களிடம் கேட்டுக் கொண்டது. ஆர்வமான பயனர்களோ, அதி வேகமாக தங்களுக்கு பிடித்த விளம்பரத்திற்கு வாக்களித்தனர்.
அந்த வகையில், உலக யூ-டியூப் வாசிகளின் ஒட்டுமொத்த ஆதரவுடன் முதல் இடத்தைப் பிடித்திருப்பது, கால் பந்து ஜாம்பவான் மெஸ்ஸியும், கூடைப்பந்து ஜாம்பவான் கோபேயும் இணைந்து டர்கிஷ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்காக நடித்துள்ள விளம்பரம்தான்.
செல்பி எடுக்கும் போட்டியில் இருவரும் நாடு நாடாக அலையும் இந்த அட்ராசிட்டி வீடியோவை யூ-டியூபில் இதுவரை 14 கோடிக்கும் மேற்பட்டவர்கள் கண்டு களித்துள்ளனர்.
கடந்த பத்தாண்டுகளில் வெளியான விளம்பரங்களில் டாப் 5 பட்டியல்:-
1. “Kobe vs. Messi: The Selfie Shootout”
2. Volkswagen “The Force”
3. Always “#LikeAGirl”
4. Volvo Trucks “The Epic Split feat. Van Damme”
5. Dove “Real Beauty Sketches”