மொரீஷியஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக அமீனா குரிப் பாகிம் பதவியேற்றார்.
மொரீஷியஸ் நாட்டின் அதிபராக இருந்த கைலாஷ் புர்யாக் அண்மையில் பதவி விலகியதையடுத்து, புதிய அதிபராக உயிரியல் விஞ்ஞானியான அமீனா குரிப்- ஃபாகிம்(56) பொறுப்பேற்பார் என்று பிரதமர் சர் அனிரூத் ஜெகனாத் அறிவித்தார்.
அவரது நியமனம் தொடர்பாக மொரீஷியஸ் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அமீனா குரிப் பாகிமினுக்கு ஆதரவாக பெரும்பான்மை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
அவரது நியமனத்துக்கு நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்ததையடுத்து, நேற்று அவர் முறைப்படி அதிபராகப் பதவியேற்றார்.