பிரிட்டன் இளவரசர் ஹாரியின் சிறந்த ராணுவ சேவைக்காக, கவுரவ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனையில் நடந்த தனிப்பட்ட நிகழ்ச்சியில், ஹாரி,30,க்கு, ‘நைட் கமாண்டர் ஆப் தி ராயல் விக்டோரியன் ஆர்டர்’ என்னும் கவுரவ பட்டத்தை அவரது பாட்டி, ராணி இரண்டாம் எலிசபெத் வழங்கினார்.ஆப்கன் போரில், இரண்டு ஆண்டுகள் பிரிட்டன் ராணுவத்தினருடன் ஹாரி பங்கேற்றார். பத்து ஆண்டுகள் ராணுவ சேவைக்குப் பின், ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார்.ராணுவத்தில் இருந்து விலகி, பொது சேவையில் ஈடுபடுவதற்கு தயார் செய்து கொள்ள, இந்த பட்டம் உதவும். ஹாரி, விரைவில் ஆப்ரிக்க பாதுகாப்பு திட்டம் மற்றும் பிரிட்டனின் ஊனமுற்ற ராணுவ வீரர்களுக்கு தொண்டாற்ற உள்ளார்.
0