செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பால்மணம் மாறாத சிறுமியின் சமூகசேவை பால்மணம் மாறாத சிறுமியின் சமூகசேவை

பால்மணம் மாறாத சிறுமியின் சமூகசேவை பால்மணம் மாறாத சிறுமியின் சமூகசேவை

1 minutes read

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை சேர்ந்த ஹெய்லி ஃபோர்ட் என்னும் சிறுமி தனது ஐந்தாவது வயதில் தெருவோரமாக கிடந்த ஒரு ஏழை முதியவரை கண்டதும் அவருக்கு நாம் என்ன செய்யலாம்? என கவலையுடன் தனது பெற்றோரிடம் கேட்டார். இதையடுத்து, அவரது பெற்றோரும் அந்த முதியவருக்கு கடையில் இருந்து உணவு வாங்கித்தந்து உதவி செய்தனர்.

இதையடுத்து, பசியால் வாடியிருந்த அந்த முதியவரின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை கண்டு பூரித்துப்போன ஹெய்லி ஃபோர்ட், தனது ஆறாவது வயதிலிருந்து வீட்டை ஒட்டியுள்ள தோட்டத்தில் கேரட், அவரைக்காய், பீன்ஸ், தக்காளி, வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளையும், இதர பழவகைகளையும் விளையவைத்து, கடந்த மூன்றாண்டுகளாக வாஷிங்டனில் உள்ள ஏழைகளுக்கான உணவு வங்கிக்கு தானமாக வழங்கி வருகிறார்.

அடுத்தகட்டமாக, வேலையின்றி சாலையோரங்களில் வசிக்கும் ஏழை எளியவர்கள் மனு செய்து, வேலை வாய்ப்பு பெற உதவும் வகையில் உள்ளூர் தபால் நிலையத்தில் 10 தபால் பெட்டிகளை வாடகைக்கு எடுத்து தந்துள்ள இந்த ஒன்பது வயது வள்ளல், சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்து, தற்போது வேலையும் பறிபோய், வீடற்று தவிக்கும் எட்வர்ட் என்பவருக்கு தனது பாட்டி மற்றும் தாயாரின் மேற்பார்வையில் இவராகவே உருவாக்கிய நடமாடும் மர வீட்டை பரிசாக அளித்து அசத்தியுள்ளார்.

இதற்காக, உள்ளூர் வாசிகளிடம் இருந்து நிதி திரட்டி போக்கிடமற்ற மேலும் பலருக்கு புதிய மர வீடுகளை உருவாக்கி தருவதே எனது அடுத்த லட்சியம் என பால்மணம் மாறாத புன்னகையுடன் கூறுகிறார், ஹெய்லி ஃபோர்ட்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.