இந்திய மன்னர் மகாராஜா ரஞ்சித்சிங்கின் ‘ரோல்ஸ் ராய்ஸ்’ சொகுசு கார், இங்கிலாந்தில் 20-ந் தேதி ஏலம் விடப்படுகிறது. ரஞ்சித்சிங், இங்கிலாந்துக்காக கிரிக்கெட் விளையாடி புகழ் பெற்றவர். இந்த காரை வாங்க அவர் ‘ஆர்டர்’ கொடுத்ததுடன் சரி.
அதை பெறுவதற்குள் அவர் இறந்து விட்டார். பிறகு, அமி டேவிஸ் என்ற தொழில் அதிபர் அந்த காரை வாங்கினார்.
இத்தகைய பின்னணி கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கார், லிங்கோன்ஷயரில் உள்ள பர்க்லி ஏல மையத்தில் ஏலம் விடப்படுகிறது. அக்கார், சுமார் ரூ.68 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சம்வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.