செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சிரியா உள்நாட்டு போரில், 2.30 லட்சம் பேர் பலி-மனித உரிமை அமைப்பு சிரியா உள்நாட்டு போரில், 2.30 லட்சம் பேர் பலி-மனித உரிமை அமைப்பு

சிரியா உள்நாட்டு போரில், 2.30 லட்சம் பேர் பலி-மனித உரிமை அமைப்பு சிரியா உள்நாட்டு போரில், 2.30 லட்சம் பேர் பலி-மனித உரிமை அமைப்பு

1 minutes read

சிரியாவில், நான்கு ஆண்டுகளாக நடக்கும் உள்நாட்டு போரில், இதுவரை, 2.30 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துஉள்ளது. அரபு நாடான சிரியாவில், 10 ஆண்டுகளாக, பஷர் அல் – ஆசாத் அதிபராக பதவி வகிக்கிறார். அதற்கு முன், 30 ஆண்டுகளாக அவரின் தந்தை, இந்த பதவியில் இருந்தார்.

வன்முறை:இந்நிலையில், 2011ல், அதிபர் பதவியிலிருந்து விலகும்படி, பஷர் அல் – ஆசாத்துக்கு எதிராக, சிரியா மக்கள் வன்முறையில் இறங்கினர். இவர்களை, அரசு படையினர் கடுமையாக ஒடுக்கினர். இதையடுத்து, அரசுக்கு எதிராக பல போராளி குழுக்கள் உருவாகின. இந்த குழுக்களை சேர்ந்தவர்கள், நவீன ஆயுதங்களுடன் அரசு படைகளுக்கு எதிராக மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடும் தாக்குதல் :அரசு படைகளும் கருணையே காட்டாமல், போராளி குழுக்களை ஒடுக்குவதாக கூறி, அப்பாவி மக்கள் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், பிரிட்டனை மையமாக வைத்து செயல்படும் சர்வதேச மனித உரிமை அமைப்பு, இந்த போரின் பாதிப்பு குறித்து தெரிவித்துள்ளதாவது:சிரியாவில் ஏற்பட்ட கலவரத்தில், இதுவரை, 2.30 லட்சம் பேர் இறந்துள்ளனர். இவர்களில், 11,500 குழந்தைகளும், 7,300 பெண்களும் அடக்கம். பேராாளி குழுக்களை சேர்ந்த, 49,0௦0 பேரும், அரசு படைகள் மற்றும் ஆதரவாளர்கள், 36,000 பேரும் இந்த சண்டையில் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு, அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.